புதுதில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 8 எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பிரத்தியக டாக்டர் பி.சி.ராய் விருதை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் துறை தலைவர் ராஜ் மல்ஹோத்ரா சிறந்த மருத்துவ ஆசிரியர் பிரிவின் கீழ் இந்த விருதை பெற்றார்.
“எய்ம்ஸ் மருத்துவமனையை சார்ந்த, மகப்பேறு(Obstetrics) மற்றும் பெண்களுக்கு வரும் நோய் பற்றி ஆயும் மருத்துவ அறிவியல்(Gynaecology) பேராசிரியர் டாக்டர் ஜே.பி. ஷர்மா, எலும்பியல்(Orthopaedic) துறை பேராசிரியர் டாக்டர் சி.சி. யாதவ், சிறுநீரக(Urology) துறை தலைவர் டாக்டர் பி.என். டோக்ரா மற்றும் அதே துறையின் பேராசிரியர் டாக்டர் அம்லேஸ் சேத், இருதய(Cardiology) துரையின் பேராசிரியர் டாக்டர் ராகேஷ் யாதவ், அணு மருத்துவ(Nuclear Medicine) துரையின் பேராசிரியர் டாக்டர் ராகேஷ் குமார், ஆகியோர் விருது பெற்றவர்கள் பட்டியலில் அடங்குவர்” என்று எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் மேலாண்மை குழு தலைவர் மற்றும் சிறுநீரகவியல்(Nephrology) நிபுணர் டாக்டர் டி,எஸ்.சனா மற்றும் மார்பு(Chest and Thoracic Surgery) அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் அரவிந்த் குமார் ஆகியோர் இந்த விருதை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்