• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான நிலைய பேருந்தில் பா.ஜ.க. எம்.பி மட்டும் தனியாக பயணம்

March 28, 2017 தண்டோரா குழு

ஏர் இந்திய ஊழியரை சிவ சேனா எம்.பி. ரவீந்திர கைக்வாத் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பட்னா ஜெய பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில், பா.ஜ.க எம்.பி ஹுகும்டோ நரைன் யாதவ் மட்டும் ஏர்லைன்ஸ் விமான பேருந்தில் தனி நபராக பயணம் செய்தது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தவர் ஹுகும்டோ நரைன் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 26) ஜெட் ஏர்வேஸ் 9W0724 விமானம் மூலம் பட்னாவிலிருந்து புதுதில்லிக்கு பயணம் செய்தார். விமான நிலையத்திலிருந்து விமானம் நிற்கும் இடத்திற்கு பயணிகளை ஏற்றிசெல்லும் பேருந்து இயக்கப்படுகிறது. அந்த பேருந்தில் அவர் மட்டும் பயணம் செய்துள்ளார்.

“ஏர்லைன்ஸ் நிறுவனம் அவர் மட்டும் பயணம் செய்ய பேருந்து தரப்பட்டது. மற்ற பயணிகள் விமான நிலையத்திலேயே விடப்பட்டனர்” என்ற அச்சம்பவததை நேரில் பார்த்த விமான பயணி ஒருவர் தெரிவித்தார்.

மற்றொருவர் கூறுகையில், “இது போன்ற சிறப்புச் சலுகைகள் குடியரசு தலைவருக்கோ அல்லது பிரதமருக்கோ தரப்படுகிறது என்றால், எங்களால் புரிந்துக்கொள்ள முடியும். ஆனால், ஒரு எம்.பி.,க்கு இது போன்ற சலுகைகள் தரப்படுகிறதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.

இது குறித்து எம்.பி ஹுகும்டோ கூறுகையில் “நான் மட்டும் பயணம் செய்ய ஏன் பேருந்து தரப்பட்டது என்று ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகளை கேளுங்கள். விமானம் வரைக்கும் நான் மட்டும் பயணம் செய்வேன் என்று எனக்கு தெரியாது” என்றார்.

துணை குடியரசு தலைவர் பதவிக்கு அவருடைய பெயர் பரிந்துறைத்துள்ளதால், அவரை கறைப்படுத்தும் விதமாக அவருடைய பகைவர்கள் இதை செய்திருக்ககூடும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் கருத்துக்கூற முன்வரவில்லை.

மேலும் படிக்க