• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வசந்த காலத்தை தொடங்கும் விழாக்களின் கொண்டாட்டத்திற்கு இந்திய குடியரசு தலைவர் வாழ்த்து

March 27, 2017 indianexpress.com

உகாடி, குடி பட்வா, செட்டி சந்த், சஜிபு செய்ரோபா, நவ்ரே, சித்திர சுக்லாடி ஆகிய விழாக்களை கொண்டாடும் மக்களுக்கு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை(மார்ச் 27) தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது:

“இந்த விசேஷ நாளின், உகாடி, குடி பட்வா, செட்டி சந்த், சஜிபு செய்ரோபா, நவ்ரே, சித்திர சுக்லாடி ஆகிய விழாக்களை கொண்டாடும் மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழாக்கள் வசந்த காலத்தின் ஆரம்பத்தை குறிப்பவை. வளர்ச்சி, செழிப்பு, மற்றும் புதிய தொடக்கத்தை உறுதியளிக்கிறது.

ஒவ்வொரு இந்திய மக்களின் இருதயத்தை இந்த விழாக்களின் சந்தோஷம் நிரப்பட்டும். நம் தேசத்தின் மக்களிடையே சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர நல்லெண்ணம் வளரட்டும். இந்த விழாக்கள் அமைதியையும் நட்பையும் பரவட்டும். தங்களுடைய தாய் நாட்டிற்கு சேவை செய்ய தங்களை மீண்டும் அர்பணிக்க நம்முடைய மக்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கட்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க