• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேர் இல்லாமல் உட்காரும் ஓ.பி.எஸ். பிரச்சாரத்தில் கலாய்க்கும் ஸ்டாலின்.

April 19, 2016 தண்டோரா குழு

சமீப காலமாக பிரச்சாரத்தின் பொது அ.தி.மு.கவினரை ஸ்டாலின் கிண்டலடிப்பது அதிகரித்துள்ளது. எங்குப் பிரச்சாரம் சென்றாலும் அங்கு அ.தி.மு.க அமைச்சர்களைக் கிண்டல் செய்து கைதட்டல் வாங்குகிறார்.

இந்த நிலையில் கரூரில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் ஜெயலலிதா மேடையில் அமர்ந்திருக்கும் பொது வேட்பாளர்கள் தரையில் அமர வைக்கப்படுகிறார்கள் என்றும், ஆனால் தி.மு.க வேட்பாளர்கள் கம்பீரமாக சரிசமமாக அமர்ந்திருக்கிறார்கள் என்றும் கிண்டலடித்தார்.

மேலும் அமைச்சர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் கூனி குறுகி வணக்கம் வைப்பார்கள் அதிலும் ஓ.பி.எஸ் சேரே இல்லாமல் உட்காருவதில் வல்லவர்.

அந்த வித்தையை அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி அவரைப்போலவே கும்பிடு போட்டுக் காட்டி தி.மு.க தொண்டர்களிடம் கைதட்டல் வாங்கினார்.

மேலும் படிக்க