• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை செல்ல ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

March 24, 2017 தண்டோரா குழு

யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் ‌விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வரக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தை லைக்கா நிறுவனம் ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்நிலையில்,லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் ஞானம் அறக்கட்டளை சார்பில் ரூ.22 கோடி செலவில் இலங்கை வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம், புளியங்குளம் பகுதிகளில் 150 வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9ம் தேதி இலங்கை யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் பங்கேற்க வரக்கூடாது என இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்த பின்னர் ரஜினி வந்தால் அவரை வரவேற்பதில் பிரச்னை இல்லை என்றும், ரஜினிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதைப்போல், ரஜினிகாந்தை வைத்து லைக்கா நிறுவனம், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை என்றும் ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க