• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் மீது நடிகை லேகா வாஷிங்டன் செக்ஸ் புகார்

March 24, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமா இயக்குனர் ஒருவர் பட வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, செக்ஸ் தொல்லை அளித்ததாக, நடிகை லேகா வாஷிங்டன் புகார் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து ஜெயம்கொண்டான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை லேகா வாஷிங்டன். அதன் பின்னர் காதலர் தினம், உன்னாலே உன்னாலே, வா குவாட்டர் கட்டிங், கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இந்திப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,சினிமாவில் நடிகையாக இருப்பதைப் பற்றி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அதில்,’’சினிமா நடிகை என்பது பெரும் சிக்கலான தொழில். நிறைய தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் காரில் என்னை அழைத்துச் சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார். அந்த இயக்குனர் கூறியது புரியாதது போன்று நடித்தேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். உங்களுடன் படுக்கையை பகிர்வேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம் என்று பளிச்சென்று சொல்லிவிட்டேன்.ஆனாலும் மீண்டும் மீண்டும் அவர் பலமுறை வற்புறுத்தினார். நான் மறுத்து விடவே, அவரது புதிய படத்தில் எனக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கிவிட்டார். அவர் ஒரு பிரபல இயக்குனரும்கூட,’’ என லேகா வாஷிங்டன் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக பரபரப்பு புகார்கள் கிளம்பி உள்ளன. பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை செய்தனர். மேலும் பல நடிகைகள் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில், லேகா வாஷிங்டன் தமிழ் திரைபட இயக்குனர் மீது செக்ஸ் புகார் அளித்துள்ளது தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க