• Download mobile app
27 Jul 2026, MondayEdition - 3820
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று வருடம் கழித்து வரப்போகிறார் எம்.ஜி.ஆர்.

April 19, 2016 தண்டோரா குழு

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகதராஜா திரைப் படம் மூன்று வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆகப்போகிறது.

விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், ஆகியோர் நடிப்பில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மதகதராஜா திரைப்படம் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அப்படம் வெளியாகாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு, அரண்மனை 1,2 என பல்வேறு படங்களை வெளிவந்துவிட்டது.

மதகதராஜா படம் மட்டும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் தள்ளிப் போனது. இந்த நிலையில் அப்படத்திற்கு தற்போது விடிவு காலம் வந்துள்ளது. படம் வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, மதகதராஜா படம் ஏப்ரல் 29-ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் விஷால் தென்னிந்திய நடிகர்சங்க நிர்வாகி ஆனா நேரம் தான் அவருக்கு எல்லாமே நல்லதாக நடக்குதுன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க………

மேலும் படிக்க