அயன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதா? என்பது குறித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் பதிலளித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அயன் படத்தின் வெற்றி ஒரு முக்கிய மைல் கல்லாக இருந்தது. மேலும் அந்த படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டராகவும் திகழ்ந்தது. இந்நிலையில் அயன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் பதிலளித்துள்ளார்.
“அயன் படத்தின் வெற்றிக்கு பிறகு, அந்த படத்தின் ரீமேக்கிற்காக பல மொழிகளிலிருந்து அழைப்புகள் வந்தன. ஆனால் ரீமேக் எடுக்கும் வேலைகள் மிகவும் போர். அதில் புதிதாக எதுவுமே செய்ய முடியாது. என்னை பொருத்தவரை புதிது,புதிதாக ஏதாவது பரிசோதித்து பார்க்க வேண்டும்.
எனவே அந்த வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்துவிட்டேன். இப்போதைக்கு அயன் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என கே.வி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா