சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு 1௦,௦௦௦ ரோஜா மலர்களை நியூயார்க் நகரிலுள்ள மக்களுக்கு ‘ப்ரோபில வோர்ஸ்’ நிறுவனம் வழங்கி மக்களை மகிழ்வித்துள்ளது.
சர்வதேச மகிழ்ச்சி தினம் மார்ச் 2௦ கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, இணையதளம் மூலம் மலர் விநியோகம் செய்யும் ‘ப்ரோபில வோர்ஸ்’ நிறுவனத்தின் ஊழியர்கள், வேலை பளுவால் சோர்ந்து போயிருந்த நியூயார்க் மக்களை உற்சாகப்படுத்த முடிவு செய்தனர். 1௦,௦௦௦ ரோஜா பூக்களை ஒரு லாரியில் ஏற்றி நியூயார்க் நகர் முழுவதும் எடுத்து சென்று அதை மக்களுக்கு தந்து மகிழ்ந்தனர்.
இந்த முயற்சிக்கு ‘சந்தோஷம் கொடுங்கள்’ என்று பெயரிடப்பட்டது. விடுமுறை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் செயல்படவும், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று உணரும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது என ப்ரோபிலவோர்ஸ் நிறுவன ஊழியர் தெரிவித்தார்.
இது குறித்து ப்ரோபிலவோர்ஸ் நிறுவனம் கூறுகையில்,
“மலர்களுக்கும் மகிழ்ச்சிக்கும் ஒரு இணைப்பு இருப்பதை ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்தது. புதிய மலர்களை ஒருவர் பெறும்போது, அவருக்கு அதிக மகிழ்ச்சியை உண்டாகுகிறது. அதேபோல் அதை கொடுப்போருக்கும் மகிழ்ச்சியை தருகிறது. இதை நிரூபிக்க நாங்கள் செயல்ப்பட்டு வருகிறோம்” என்றது.
“நான் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறேன் .நான் விஷேசமானவள் இவை என்னை அழகுப்படுத்துகிறது” என்று மலர்களை பெற்ற மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு