March 20, 2017
தண்டோரா குழு
இளையராஜா பற்றி விமர்சனம் செய்ய எனக்கு தகுதியில்லை ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
சென்னை சத்தியம் திரையரங்கில் காற்று வெளியிடை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாநடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் மணிரத்னம்,நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த ஏ.ஆர்.ரகுமானிடம்,இளையராஜா பாடல்களை பாட தடைவிதித்து எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜா பாடல் சர்ச்சை தொடர்பாக யோசிக்காமல் எதுவும் கூற முடியாது எனவும்இளையராஜா பற்றி விமர்சனம் செய்ய எனக்கு தகுதியில்லை எனவும் கூறினார்.