March 20, 2017 
tamil.samayam.com
                                அஸ்வின் தாத்தா டீசரை பார்த்த சூப்பர் ஸ்டார், நடிகர் சிம்புவை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும், ‘அன்பானவன்,அசராதவன்,அடங்காதவன்’ படத்தில் இடம்பெறும் அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தின் 2 நிமிட டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டீசருக்கு தமிழக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த டீசரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்புக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். இதனை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “தலைவர் இப்போதுதான் போன் செய்து அஸ்வின் தாத்தா டீசருக்காக என்னை பாராட்டினார். ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.” என சிம்பு தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
அதே போல, இந்த படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரனும்,” தலைவா..எதிர்பாராத போன் அழைப்பு..!இது போதும் தலைவா..!” என டிவீட் செய்துள்ளார்.