• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தல’ அஜித்துக்காக சிவா வைத்த செண்டிமெண்ட்!

March 17, 2017 tamilsamayam.com

தல அஜித், சிவா கூட்டணியில் வீரம், வேதாளம் ‘ஹிட்’டுக்கு பின் ஹாட்ரிக் கொடுக்க தயாராகவுள்ள படம் விவேகம்.

சமீபத்தில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பட்டைய கிளப்பிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தல அஜித் இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்புக்காக சென்றுள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி, என பலரும் ஒவ்வொரு தேதிகளை தெரிவித்துவரும் நிலையில், வீரம், வேதாளம் படங்களுக்கு வைத்த செண்டிமெண்டை , சிவா மற்றும் படக்குழுவினர் விவேகம் படத்துக்கும் வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வீரம் படம் கடந்த ஜனவரி 10, 2014ல் வெளியானது. அதே போல வேதாளம் படம் கடந்த 2015 நவம்பர் 10ல் ரிலீஸானது. இதே செண்டிமெண்டில் வரும் ஆகஸ்ட் 10, 2017ல் விவேகம் படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

மேலும் படிக்க