March 17, 2017 
awesomecuisine.com
                                தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் – ஒரு கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது).
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்.
கடுகு – கால் டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – நான்கு.
கரிவேபில்லை – சிறிதளவு.
சின்ன வெங்காயம் – பத்து.
பச்சை மிளகாய் – நான்கு.
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.
பூண்டு – பத்து.
கொத்தமல்லி – சிறிதளவு.
உப்பு – தேவைகேற்ப.
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி பிறகு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிட்டு க்ரேவி பதம் வந்தது வஞ்சரம் மீன் சேர்த்தும் கிளறி ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி துவி இறக்கி பரிமாறவும்.