• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டென்மார்க் பாடகரை களமிறக்கும் இமான்!

March 16, 2017 tamilsamayam.com

டொராண்டோவைச் சேர்ந்த இலங்கை தமிழ் பாடகர் லூக்ஷிமி சிவனேஸ்வரலிங்கம் என்பவரை ‘போகன்’ திரைப்படத்தில் அறிமுகம் செய்த இசையமைப்பாளர் இமான், தற்போது திலக்ஷன் ஜெயரத்னம் எனும் தமிழ் பாடகரை டென்மார்க்கில் இருந்து களமிறங்கியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் – நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்படத்தில் இடம்பெறவுள்ள ஒரு பாடலை பாட டென்மார்க் பாடகரை அறிமுகபப்டுத்தவிருப்பதாக இமான் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தனது திரைப்படங்களில் தொடர்ந்து புதுமுக பாடகர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் இமான். அதற்கு யூடியூப் மிகவும் உதவியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திலக்ஷன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பாடிய கவர் ஆல்பத்தை கேட்டு அவரை அணுகியதாக இமான் கூறியுள்ளார்.

திலக்ஷன் தான் பாட வேண்டிய பாடலை டென்மார்க்கிலேயே பாடி ஒலிப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஸ்கைப் மற்றும் வாட்ஸ் அப் கால் மூலம் பாடலை விளக்கியதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் குடியேறிய தமிழர்களின் சொல் உச்சரிப்பு வித்யாசமாக இருப்பது தான் சிறிது சிரமத்தை ஏற்படுத்தியதாக இமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அம்மாணி நீ முன்னே’ எனும் மெலடி காதல் பாடலை அவர் படியிருப்பதாகவும், அவருடன் சேர்ந்து சாஷா திருப்பதி பாடியிருப்பதாகவும் இமான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க