• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓடும் விமானத்தில் யோகா செய்ய வேண்டும் என்று ரகளை செய்தவருக்கு சிறை தண்டனை.

April 16, 2016 தண்டோரா குழு

பயணி ஒருவர் விமானத்தில் தன்னுடைய இருக்கையின் அமராமல் யோகா செய்ய வேண்டும் என்று ரகளை செய்ததால் ஜப்பான் செல்ல வேண்டிய விமானம் ஹவாய் நாட்டில் தரை இறக்கம் செய்யப்பட்டது.

முதன் முறையாக தெற்கு கொரியாவில் இருந்து ஹவாய் நாட்டிற்கு தங்களுடைய 40வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக தம்பதியினர் சென்றனர்.

தங்களுடைய விடுமுறைக்குப் பிறகு ஹொனொலுலு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் தனது மனைவியுடன் பயணம் செய்யப் புறப்பட்டார்.

விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் யோகா செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தார். மேலும் அவர், இருக்கையில் அமராமல், கீழே அமர்ந்து யோகாசனம் செய்ய முற்பட்டர். இதனைக் கண்ட விமான ஊழியர்கள், அவ்வாறு யோகாசனம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

ஆனால், அவர் அதற்குச் செவி சாய்க்காமல், யோகா செய்ய முற்பட்டார். இதனால், விமான ஊழியர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்து, விமானத்தின் பைலட் ஹவைய் நாட்டில் விமானத்தைத் தரை இறக்கம் செய்தார்.

பின்னர் அந்தப் பயணி கைது செய்யப்பட்டார். விசாரணையில் உணவு வேளையில் இருக்கையில் அமரப் பிடிக்காத காரணத்தால் யோகா மற்றும் தியானம் செய்ய விமானத்தின் பின் பகுதிக்குச் சென்றதாகவும்,

அவருடைய மனைவி மற்றும் விமான குழுவினர் அவரை இருக்கைக்குப் போகும் படி சொன்னதை கோபத்தை உண்டாக்கியது என்றும், அவருடைய மனைவி அவரைக் கட்டுப்படுத்த முயன்ற போது அவள் விமான குழுவுடன் சேர்ந்த விட்டதாக நினைத்து அவரைக் கீழே தள்ளியதாக அந்தப் பயணி தெரிவித்துள்ளார்.

மேலும் விமானத்தில் பயணித்த கடற்படை வீரர்கள் அவரை இருக்கையில் அமர்த்த முயன்ற போது அவர்களுடைய கையை கடித்து, பயணிகளைக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து நீதித் துறை நடுவர், கெவின் சங், குற்றவாளிக்கு 25,000 அமெரிக்க டாலர் அபராத கட்டணம் மற்றும் ஓஹு தீவை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் ஒரு மன நல ஆலோசனைக்கு செல்ல வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

மேலும் படிக்க