• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா – தமிழிசை சவுந்தரராஜன்

March 14, 2017 தண்டோரா குழு

ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பணிகள் ஆரம்பிக்கும் முன்னரே சில கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது;

“தமிழகத்தில் பிரதான பிரச்சனையான குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியிருப்பதால், பேருந்து கட்டணம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக அரசிடம் நிர்வாக திறமை இல்லை. சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுதல் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து சென்னையில் வரும் 16-ம் தேதி நடைபெறும் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கும் முன்னரே சில கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஆரம்ப நிலையில் இருந்தே ஆர்.கே. நகர் தொகுதியைக் கண்காணித்து இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு பலமும் இல்லாத மக்கள் நலக்கூட்டணிக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் எதற்காக அழைப்பு விடுத்தார்? வஅ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. கிடையாது.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டும். வட மாநிலங்களுக்குக் கல்வி பயில செல்லும் தமிழக மாணவர்களுக்கான பாதுகாப்பை அந்தந்த மாநில அரசுக்குள் உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் முறையாகக் கிடைக்கவில்லை எனில், பா.ஜ.க. சார்பில் இது தொடர்பாக மாநிலம் முழுவதும் ஒரு வார காலத்திற்குள் போராட்டம் நடத்தப்படும்”.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மேலும் படிக்க