• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகுகருக்குடி நாதசுவாமி திருக்கோவில்

November 20, 2018 tamilsamayam.com

சுவாமி : அருள்மிகு கருக்குடிநாதர்.

அம்பாள் : அருள்மிகு கல்யாண நாயகி.

மூர்த்தி : அனுமத் லிங்கம், விநாயகர், கார்த்திகேயன்.

தலச்சிறப்பு :

ஆவுடையார் மண்ணாலானது, ஏனாதி நாயனார் பிறந்த ஊர் அருகில் உள்ளது என்பர். சிறிய பழைமையான கோயில் ஆகும். கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, இவ்வாலயத்தின் சிறப்பாகும். கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை. வாயிலில் விநாயகர், கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் உள்ளது அனுமத்லிங்கம். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார் பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு :

தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான். அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது. எனவே தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

வழிபட்டோர் : அனுமன், சம்பந்தர்.

பாடியோர் : சம்பந்தர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.

திருவிழாக்கள் :

மாசி மகம் சிவராத்திரி,

கார்த்திகையில் திருக்கார்த்திகை விழா.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோவில்,மருதநல்லூர் அஞ்சல் – 612 402, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க