• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹோலி கொண்டாட்டத்தில் விதவைகள்

March 9, 2017 தண்டோரா குழு

வாராணசியில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் விதவைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு கலந்துக்கொண்டனர்.

வாராணசியில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான கோபிநாத் கோவில் வளாகத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் வாராணசி மற்றும் விரிந்தாவன் ஆகிய இடங்களிலிருந்து விதவைகள் வந்து இந்த கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.

பிரிந்தாவனின் கோபிநாத் பஜாரில் உள்ள பழமையான கிருஷ்ணர் கோவிலில், வெள்ளை உடை அணிந்த விதவைகள் வந்து வண்ண நிறங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.

வாராணசியில் உள்ள ‘சுலப் சர்வதேசம்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சமூக ஆர்வலரான பிந்தேஸ்வர் பாடக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்தான் விதவைகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

“விதவைகள் வண்ண ஆடைகள் அணிவதற்குத் தடை பரம்பரை பரம்பரையாக இருந்தது. ஆனால், அதை உடைத்து வெளியே வருகிறார்கள் என்பதைக் குறிப்பது தான் அவர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு அடையாளம்” என்றார் பாடக்.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “1,5௦௦ கிலோகிராம் வண்ண நிறப் பொடிகளும், 1,5௦௦ கிலோ கிராம் பூக்களின் இதழ்கள் இந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வாராணசி மற்றும் பிரிந்தாவனில் உள்ள 8 ஆசிரமங்களில் வசிக்கும் 8௦௦ விதவைகளுக்கு 2௦௦௦ ரூபாய் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தது.

மேலும் படிக்க