• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைத்தளப் பயன்பாடு அதிகரித்தால் தனிமை உணர்வு அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்

March 7, 2017 தண்டோரா குழு

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் அதிகமாகும்போது தனிமை உணர்வு அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக நேரம் சமூக வலைதளம் பயன்படுத்துவோர் குறித்து அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மயக்கவியல் துறை ஆய்வாளர்கள் குழு ஓர் ஆய்வு நடத்தியது. 19 வயது முதல் 32 வயது வரையிலான 2,000த்துக்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் தினசரி 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதளப் பயன்பாட்டில் இருந்தால், அது அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வை அதிகரிக்கும் எனக் கண்டறியப்பட்டது.

மேலும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் உணர்வால் இளைய தலைமுறையினரே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அதிகரிக்கும் சமூக வலைத்தளப் பயன்பாடுகள், இளைய தலைமுறையினரை நிஜ உலகிலிருந்து தனிமைப்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதைப் போல், சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிக்கும் இளைஞர்கள், நிஜ வாழ்வு உரையாடல்களில் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டனர் என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க