• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு நாச்சியார் கோவில்

March 6, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு சீனிவாச பெருமாள்.

அம்பாள் : அருள்மிகு வஞ்ஜீளவல்லி.

மூர்த்தி : திருநறையூர் நம்பி, வாசுதேவன், நாச்சியார்.

தீர்த்தம் : மணிமுக்தாபுஷ்கரணி, ஷங்கர்ஷன தீர்த்தம், பிரித்யுமன தீர்த்தம், அனிருத்த தீர்த்தம், சாம்ப தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வ மரம், வகுள மரம்.

தலச்சிறப்பு :

108 திவ்ய தேசங்களில் இது 14 வது திவ்ய தேசமாகும். இத்திருகோயிலில் உள்ள கல்கருடனுக்கு வியாழன் தோறும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகலதோஷங்களும் நிவர்த்தியாகும். பெருமாளுடைய கல்கருடசேவை புகழ் பெற்றது. இந்த வாகனத்தை சன்னதியில் நான்கு பேர்களும், கோவில் வாசலில் 64 பேர்களும் எழுந்தருள பண்ணும் வகையில் வாகனம் சிறுகசிறுகக் கனத்து விடும் சிறப்புடையது.

இவ்வூரில் மேதா எனும் முனிவர், திருமகளே தனக்கு மகளாக வர வேண்டும் என்று மணிமுத்தா நதிகரையில் கடும் தவம் இருந்தார். அவர் தவத்தினை மெச்சிய திருமகள் பாற்கடலை விட்டுப் பங்குனி மாதம் வெள்ளிகிழமை, உத்திர நன்னாளில் ஆற்றங்கரையில் வஞ்சுள மரத்தின் கீழ் அவதரித்தாள். வஞ்சுளவல்லி எனப் பெயர் பூண்டாள். சீனிவாசப்பெருமானை மணந்தாள். இத்தலம் உள்ள பகுதி கிருஷ்ணாரண்யம் என்றும் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் மட்டுமே கல்கருட சேவை நடைபெற்று வருவது தனிச் சிறப்புடையது ஆகும்.

வழிபட்டோர் : மேதா முனிவர், இந்திரன், வாயு, திருமங்கையாழ்வார்.

பாடியோர் : திருமங்கையாழ்வார்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

வைகாசி – வசந்த உற்சவம் 5 நாட்கள்,

ஆடி – பவித்ர உற்சவம்,

ஆவணி – திருகல்யாண உற்சவம்,

புரட்டாசி – நவராத்திரிவிழா 9 நாட்கள்,

தை – ராப்பத்து – பகல்பத்து உற்சவம்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : அருள்மிகு சீனிவாசபெருமாள் திருக்கோவில்,நாச்சியார் கோயில் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க