• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீக்கிய மக்களின் வசந்த விழாவான வைசக்ஹி.

April 13, 2016 ibtimes.co.uk

வைசக்ஹி என்னும் சீக் இன மக்களின் விடுமுறை நாள் பஞ்சாப் பகுதியில் வசந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைசக்ஹி என்பது பைசக்ஹி என்றும் அழைக்கப்படுகிறது.

சீக்கியர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13, மற்றும் 14ஐல் வசந்தகால விழாவாகவும், சீக்கியர்களின் புத்தாண்டாகவும் சிறப்பாக கொண்டுகிறார்கள். போகி மற்றும் தீபாவளி போல வைசக்ஹி அவர்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும்.

1699ம் ஆண்டு முதல் இந்த நாள் சீக்கியர்களின் மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அன்று தான், சீக்கியர்களின் 10வது குருவான, குரு கோவிந்த் சிங் என்பவர் கல்ச என்னும் ஐந்து நபர்கள் கொண்ட குழுவை துவக்கி வைத்தார். சீக்கியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்களின் ஒற்றுமையைக் கூட்டுவதும் இந்தக் குழுவின் முக்கிய குறிக்கோள் ஆகும். இதற்காகத் தெரிந்து கொள்ளப்பட்ட ஐந்து பேர் தான் பாஞ் பியாரே என்று அழைக்கப்படுகிறார்கள்.

கடைசி சீக்கிய குருவாக இருந்த குரு கோவிந்த் சிங் அவர்கள் தல்வாண்டி சபூ என்னும் இடத்தில் சுமார் 9 மாதங்கள் தங்கியிருந்து சீக்கிய சிக்கிய புனித நூலான குரு கரந்த் சாஹிப்பை எழுதினார்.

வைசஹி நாள் அன்று சீக்கிய மக்கள், கல்ச அவர்கள் பிறந்த இடமான அனந்தபூர் சாஹிப் கோவில் மற்றும் அமிர்தசரசில் உள்ள தங்க கோவிலில் சிறப்பு பூஜை செய்து, விசேஷமாகக் கொண்டாடுவர்.

வைசக்ஹி நாளில் சீக்கிய மக்கள் புனித ஸ்தலங்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் யாத்திரை சென்று அங்குள்ள கோவில்களில் உள்ள சடங்குகளில் பங்கேற்பர். நடனம், வானவேடிக்கை, பலவகை உணவு எனப் பண்டிகை களைக் கட்டும்.

மேலும் படிக்க