• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எப்போதும் மாணவர்களுக்குக் கருத்து சொல்லும் படத்தையே இயக்குவேன். கோவையில் சமுத்திரகனி பேச்சு.

April 13, 2016 முகமது ஆசிக்

கோவை தனியார் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியான வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்களிடத்தில் அறிவுரை என்ற பெயரில் பெரிய சதியே நடக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார், மேலும், மாணவர்களுக்கு யாரும் அழுத்தம் தரக்கூடாது, அவர்களை அவர்கள் போக்கில் விடவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் தான் ஊழல் இல்லாத ஆத்மாக்கள், வாழ்க்கையில் கல்வி மட்டும் முக்கியம் அல்ல அதையும் தாண்டி பலவிஷயங்கள் இருப்பதாகக் கூறிய அவர், மாணவர்களுக்கு எந்த நேரமும் எதிர்காலம் குறித்த பயம் இருக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்காலத்தில் சந்தோசமாக வாழவேண்டும் எனவும் குழந்தைகள் பெற்றோர்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது இந்த உலகிற்கும் சொந்தம் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை எதையும் தனியாக கொண்டுவர முடியாது எனினும், தனி ஒரு மனிதன் முதலில் மாறவேண்டும் அப்போது தான் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்றார்.

இந்தியாவிற்கு இறைவன் கொடுத்த சாபம் தான் ஜாதி என்று கூறிய அவர், ஜாதியை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும், அப்படத்தில் நேரடியாகக் கெளரவ கொலைகள் குறித்து சொல்லாமல் மறைமுகமாகக் கெளரவ கொலை கருத்துகள் இருக்கும் என்றார்.

மேலும் என்னுடைய திரைப்படங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்ளுக்கு நல்ல கருத்துகளை சொல்லும் படங்களாகத்தான் இருக்கும் எனவும், அதற்கு எடுத்துக்காட்டாகத் தான் தற்போது அப்பா என்ற திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருப்பதாக்கவும் தெரிவித்தார்.

நடிகர் சங்க நட்சத்திர கிரிக்கெட் போட்டி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நடிகர் சங்க உறுப்பினர்கள் என்ற முறையில் அந்தப் போட்டியில் கலந்து கொள்வேன் என்றார். மேலும், நடிகர் சங்கத்தின் செயல்பாடு தற்போது தி௫ப்பதிகரமாக உள்ளது எனக்கூறிய அவர் அடுத்த நிலைக்கு நடிகர் சங்கத்தை எடுத்துச் செல்வார்கள் என நம்பிக்கை தனக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க