• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இப்படி ஒரு முதல்வரை ஏற்றுக் கொண்டது அவமானம் இல்லையா? மார்க்கண்டேய கட்ஜு

February 25, 2017 தண்டோரா குழு

“எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக ஏற்றுக் கொண்டது உங்களுக்கு அவமானம் இல்லையா?” என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மிக காட்டமாக தனது “ஃபேஸ்புக்” சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் நிகழ்வுகள் குறித்தும், சமூக நிகழ்வுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் பரபரப்பாகக் கருத்துகளைச் சொல்பவர் மார்க்கண்டேய கட்ஜு. ஜல்லிக்கட்டு விஷயத்தில் மெரீனாவில் மாணவர்களின் போராட்டத்தைப் பாராட்டிய அவர் தமிழகத்தின் பல நிகழ்வுகள் குறித்து கருத்து கூறி வருகிறார்.

சசிகலா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி குறித்து அவர் பதிவு செய்துள்ள கருத்து மிகவும் காரசாரமாக இருக்கிறது.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

அன்பார்ந்த தமிழர்களே! சிறைக் கைதியின் தலையாட்டி பொம்மை உங்களுக்கு முதல்வராக இருக்கிறாரே…. நீங்கள் எதுவுமே செய்ய மாட்டீர்களா? நீங்கள் அனைவரும் சேர, சோழ, பாண்டிய பேரரசர்களின் சந்ததியர்கள்.

நீங்கள் வீழ்ந்து போனால் உங்களுடைய மூதாதையர்களுக்கு அவமானம் அல்லவா? திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், ஆண்டாள், பாரதியார் ஆகிய சந்ததியர்களின் வழிவந்தவர்கள் நீங்கள். இப்படி ஒரு முதல்வரை ஏற்றுக் கொண்டது உங்களுக்கு அவமானம் இல்லையா?

நானும் தமிழன் என்று கர்வமாக கூறி வந்தேனே. இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இப்படி சொல்வேனோ?

நான் பகிரங்கமாகவே சொல்கிறேன். பழனிச்சாமி தமிழக முதல்வராக நீடிக்கும் வரை நான் தமிழனாக இருக்கப் போவதில்லை. அவமானம், அவமரியாதை பற்றிய கவலை இல்லாத ஒரு சமூகத்தில் நானும் ஒருவனான வாழ மறுக்கிறேன்… இதற்குப் பதில் நான் செத்துப் போவதே மேல்”

இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜு பரபரப்பாகக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க