• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மருத்துவர் சீதா கைது

February 25, 2017 தண்டோரா குழு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக அப்பல்லோ மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் ராம சீதாவை சைபர் கிரைம் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாட்கள் கழித்து உயிரிழந்தார். இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படும் ராம சீதா என்பவர், ”ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். அது சமூக வலைதளங்களில் பரவியது.

அந்தப் பதிவில், “ஜெயலலிதா மருத்துவமனைக்கு ஒரு சாதாரண நோயாளியைப் போலத்தான் கொண்டுவரப்பட்டார். மருத்துவமனையில் அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை. மருத்துவமனைக்கு ஜெயலலிதாவுடன் ரத்த சம்பந்தமான உறவினர்கள் யாரும் வரவில்லை. அவருடன் தங்கும் நிலையில் யாரும் வரவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்கு, வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்களைக் கூட அனுமதிக்கவில்லை. ஆகையால், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றும் ராமசீதா கூறியிருந்தார்.

இதையடுத்து அவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை ராம சீதா நேரில் சந்தித்து ஜெயலலிதா சிகிச்சை குறித்து பேசியிருந்தார்.

இது குறித்து, அப்பல்லோ நிர்வாகம் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தது. அந்தப் புகாரை ஏற்ற சைபர் கிரைம் போலீசார் ராமசீதாவைச் சனிக்கிழமை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார், “தொடக்கத்தில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டராக சேவை செய்தவர் என்று பரவலாகக் கூறப்பட்டு வந்தது.

ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில், ராமசீதா மருத்துவர் அல்ல, ஊட்டச்சத்து வல்லுநர் என்பதும் தெரியவந்துள்ளது” என்று போலீசார் கூறினர்.

மேலும் படிக்க