• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா பிறந்தநாள்- 69 லட்சம் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

February 24, 2017 புதிய செய்திகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் தொடக்கமாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மகிழம்பூ மரக்கன்றை நட்டு, திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

இந்த மரக்கன்றுகளை நடும் பணி பிப்ரவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். மேலும், இம்மரக்கன்றுகள் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆகியவற்றின் வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பருவநிலை மற்றும் மண்வளத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்படும்.

இந்த மரக்கன்றுகள் வாங்குவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.13 கோடியே 42 லட்சம் செலவிட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் வனத்துறை சார்பில் 69 லட்சம் மரக் கன்றுகள் நடப்படுகின்றன.

மேலும் படிக்க