• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை மீனவர்கள் தாக்கியதில் 4 தமிழ் மீனவர்கள் காயம்

February 24, 2017 தண்டோரா குழு

கோடியக்கரை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர். அதில் 4 தமிழக மீனவர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பாம்பன் நாட்டுப் படகு சங்கத் தலைவர் எஸ். அருள் கூறுகையில், “முதலில், கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தமிழக மீனவர்களை மிரட்டியுள்ளனர். பிறகு, அவர்களைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அவர்களுடைய வலைகள், உபகரணங்கள், கைபேசி, வாக்கி-டாக்கி சாதனம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர்.

மீன் பிடிப்பதற்காக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) காலையில் பாம்பனில் இருந்து கடலுக்குள் 7 பேர் அடங்கிய குழுவில் ஒரு பகுதியாக அவர்கள் சென்றனர். மற்றவர்கள் பத்திரமாகத் திரும்பி வந்தனர்.

படுகாயமடைந்த 4 மீனவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். மருத்துவர்கள் அவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்றார்.

மேலும் படிக்க