• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

37 ஆண்டு சாதனையை தகர்த்து எறிந்த சூப்பர் ஹீரோ அஷ்வின்!

February 24, 2017 tamilsamayam.com

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் அஷ்வின், முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை தகர்த்தெறிந்தார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புனேயில் இன்று துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில், 9 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, மேலும் ஒரு பவுண்டரி சேர்த்த நிலையில் ஸ்டார்க் (61) அஷ்வின் சுழலில் சிக்கினார்.

புதிய சாதனை:

இதன் மூலம் இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்டில் அஷ்வின் மொத்தமாக 64 (நியூசிலாந்து 27 + இங்கிலாந்து 28 +வங்கதேசம் 6 + ஆஸ்திரேலியா 3) விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் கபில் தேவின் 37 ஆண்டு கால சாதனையை அஷ்வின் தகர்த்தெறிந்தார்.

கடந்த 1979-80ல் இந்தியாவில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மொத்தமாக 63 விக்கெட் கைப்பற்றியதே, ஒரு சீசனில் அதிகவிக்கெட் பவுலருக்கான சாதனையாக இருந்தது. அதை அஷ்வின் தற்போது முறியடித்துள்ளார். தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ள நிலையில் அஷ்வினின் விக்கெட் வேட்டை தொடரலாம்.

மேலும் படிக்க