February 22, 2017
தண்டோரா குழு
கேரள மாவட்டத்தின் கோழிக்கோட்டில் உள்ள எஸ்எம் தெருவில் தீ விபத்து புதன்கிழமை (பிப்ரவரி 22) காலையில் ஏற்பட்டது.
கேரளத்தின் எஸ்எம் தெரு ஒரு பெரிய வணிக இடமாகும். அவ்விடத்தை ‘மிட்டாய்த் தெருவு’ என்று அழைக்கப்படுவதும் உண்டு.
அங்குள்ள ஒரு ஜவுளிக் கடையில் காலை 11.30 மணியளவில் தீ பிடித்துள்ளது. அந்தத் தீ வேகமாகப் பரவியதால் அப்பகுதியில் இருந்த 15 கடைகள் நாசமாயின.
தகவல் அறிந்த 1௦ தீயனைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை அணைத்து, அதன் சுற்றியுள்ள உணவகங்களுக்குப் பரவாமல் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கான காரணமும் சரியாக கண்டுப்பிடிக்க முடியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.