• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல தொலைக்காட்சி அதிகாரி தவறாக நடந்துகொண்டார்-நடிகை வரலட்சுமி புகார்

February 21, 2017 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ், மலையாள நடிகை பாவனா கேரள மாநிலத்தில் கடத்தப்பட்ட சம்பவம் திரையுலகை அதிரச் செய்திருக்கிறது. பாவனாவுக்கு நீதி வேண்டும் என்று தமிழ், மலையாளத் திரையுலகப் பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாவனாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை வரலட்சுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஒரு பிரபல தொலைக்காட்சி தலைமை அதிகாரியுடனான ஒரு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

கூட்டம் முடிந்த பின் என்னிடம் பேசிய அவர், “நாம் வெளியே சந்திக்கலாமா?” என்று கேட்டார்.

அதற்கு, நான், “ஏதாவது வேறு வேலை தொடர்பாகவா?” என கேட்டேன். அதற்கு அவர் அற்பமாகச் சிரித்து விட்டு, “இல்லை, இல்லை, வேறு விஷயத்திற்காக இல்லை.. மற்ற விஷயத்திற்காக” என்று பதிலளித்தார்.

எனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி, கோபம் இரண்டையும் மறைத்துக் கொண்டு, “மன்னிக்கவும், இங்கிருந்து கிளம்புங்கள்” என்றேன்.

அவர் உடனே, “அவ்வளவுதானா?” என்று கேட்டுவிட்டு, சிரித்தபடி அங்கிருந்து சென்று விட்டார்.

இதுபற்றி நான் வெளியே கூறினால், “சினிமாத் துறை இப்படித்தான் இருக்கும். தெரிந்துதானே இந்த துறைக்கு வந்தாய்?” என்பார்கள். பாலியல் தொல்லைக்கு உட்படுவதற்காக நான் இங்கே வரவில்லை.

சினிமாவில் நடிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. அதையே தொழிலாக எடுத்துக் கொண்டேன்.

திரையில் நான் கவர்ச்சியாக நடிக்கிறேன் என்பதற்காக என்னை மோசமாக நடத்த வேண்டும் என்பதில்லை. பெண் எது போன்ற ஆடை அணிய வேண்டும் என போதிப்பதை விட, பெண்களை எப்படி மதிக்க வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் ஆண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

பெண்களை அவமானப்படுத்துவது எல்லா மட்டத்திலும் நடக்கிறது. பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாம் கற்கும் கல்வியும் இது பற்றிப் பேசுவதில்லை. எனவே, இதையெல்லாம் பேச பெண்கள் தயங்குகிறார்கள். அவர்களுக்காக நான் பேசுகிறேன்.

இப்போதும் பேசாவிட்டால் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே கனவாகிவிடும். நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. எல்லா சகோதரிகள், நண்பர்களும் இதுபற்றி பேசவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.

இவ்வாறு வரலட்சுமி தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க