• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்திரேலியாவில் கட்டடம் மீது விமானம் விழுந்து விபத்து

February 21, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் உள்ள வணிக வளாகத்தின் மீது சிறிய விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

“ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சிறிய விமானம் அங்கு இருத்த பிரபல வணிக வளாகத்தின் மீது செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) மோதியது. அங்கு நேர்ந்த சேதம் குறித்து உடனடி தகவல் தெரியவில்லை” என்றார்.

“மெல்பெர்ன் நகரின் புறநகர் பகுதியான ஈஸ்செண்டன் என்னும் இடத்தில் டிரக்ட் பாக்டரி ஔத்லேட் வணிக வளாகம் உள்ளது. அந்த இடத்தை திறக்க சரியாக 45 நிமிடத்திற்கு முன்பு இரண்டு என்ஜின் கொண்ட பீச் கிராஃப்ட் சூப்பர் கிங் விமானம் மோதியது.

மெல்பெர்ன் நகரில் இருந்து 255 கிலோமீட்டர் (16௦ மையில்) தூரத்தில் உள்ள கிங் தீவு என்னும் இடத்திற்கு செல்ல, மெல்பெர்ன் நகரில் உள்ள ஈஸ்செண்டன் என்னும் இடத்தில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையத்தில் இருந்து கிளம்பியுள்ளது” என்று காவல்துறை அமைச்சர் லிசா நேவில்லி கூறினார்.

காவல்துறை கண்காணிப்பாளர் மிக் பிரெவேன் கூறுகையில், “அந்த வணிக வளாகம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது. வணிக வளாகத்தின் பின் புறம் இருந்த சேமிப்பு அரங்கில் மோதுவதற்கு முன், இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமான பைலட் தகவல் தந்துள்ளார்.

தகவல் அறிந்த காவல் துறையினர், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விமானம் மோதியதால் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் தெரியவில்லை” என்றார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஜேசன் என்பவர் கூறுகையில், “டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது இந்த வணிக வளாகத்தைக் கடந்து செல்ல நேர்ந்தது. அப்போது விபத்துக்குள்ளான விமானம் மிக வேகமாகவும் கீழான நிலையில் பறந்துகொண்டிருப்பதைக் கண்டேன். இவ்வாறு பரப்பதால் ஏற்படவிருக்கும் விளைவு புரியவில்லை.

ஆனால், வணிக வளாகத்தின் மீது மோதியபோது தீப்பற்றியது. அந்த தீயின் சூட்டை வாகனத்தில் உள்ளே அமர்ந்திருந்த என்னால் உணரமுடிந்தது. பிறகு விமானத்தில் சக்கரம் சாலையில் உருண்டோடி வந்து சென்றுகொண்டு இருந்த டாக்ஸியின் முன் மோதியது” என்றார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து ஈஸ்செண்டன் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க ஆஸ்திரேலிய விமான அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க