• Download mobile app
18 Jan 2026, SundayEdition - 3630
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஷ்புக்கின் நட்பைப் பெற்ற தேர்தல் ஆணையம்.

April 12, 2016 Web India.com

தமிழக தேர்தலில் நூறு சத விகித வாக்குப்பதிவிற்காகச் சமூக வலைத்தளமான பேஷ்புக்குடன் ஜோடி சேர்ந்த தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் நூறு சதவிகித வாக்குப்பதிவு என்பதைத் தேர்தல் ஆணையம் குறிக்கோளாக வைத்துச் செயல்பட்டு வருகிறது.

இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் வீட்டு உபயோகப் பொருட்கள் விநியோகத்தின் போது கவரில் தேர்தல் தேதி குறிப்பிடுவது மற்றும் கட்டாய வாக்குப்பதிவு குறித்து விளம்பரம் செய்வது, காஸ் சிலிண்டர், ரேசன் பொருட்கள் மற்றும் பால் பக்கெட் உள்ளிட்ட அனைத்திலும் தேர்தல் தேதி மற்றும் கட்டாய வாக்குப்பதிவு வாசகம் இடம்பெறச் செய்தனர்.

இதனிடையே இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வயதினரை மட்டுமே சேர்ந்து வருகிறது எனத் தெரிந்த பிறகு, புதிய வாக்காளர்கள் மற்றும் கணினி துறையில் வேலை செய்பவர்களை குறிவைத்து பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துத் தேர்தல் ஆணையம்.

இதையடுத்து தேர்தல் ஆணையமும் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக உள்ள பேஷ்புக் வலைத்தளமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி தேர்தல் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவும், தேர்தல் தேதியன்றும் (முகநூல்) பேஷ்புக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி வலியுறுத்தப்படும்.

மேலும் அந்த இணைப்பைத் தொட்டவுடன் தானாகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் சென்றுவிடுமாறு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட பேஷ்புக் நிறுவனத்தின் இந்தியா மற்றும் மத்திய, தெற்காசிய நாடுகளுக்கான பொது வரைமுறை இயக்குநர் அன்ஹி தாஸ்,

தற்போது தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 31 சதவிகிதம் எங்களிடம் கணக்கு வைத்துள்ளனர். எனவே நூறு சதவிகித வாக்குப்பதிவு என்பதில் எங்களுக்கும் பங்குள்ளது என்பதை அறிந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த ஒப்பந்தம் மற்ற மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் உலகளவிலான ஒரு சமூக வலைத்தள நிறுவனமும் இந்திய தேர்தல் ஆணையமும் இணைந்து பணியாற்றுவது பெருமையான விசயம் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க