• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை பிரதியுஷாவின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் ரசிகை தூக்கு போட்டு தற்கொலை.

April 12, 2016 tamil.oneindia.com

நடிகை பிரதியுஷா பானர்ஜினியின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது ரசிகை ஒருவர் தனது 2 வயது மகன் முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரதியுஷா பானர்ஜி(24) கடந்த 1ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி போலீசார் பிரதியுஷாவின் காதலர் ராகுல் ராஜ் சிங்கை கைது செய்துள்ளனர்.

ராகுலின் கொடுமை தாங்க முடியாமல் தான் தங்களின் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பிரதியுஷாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரை சேர்ந்த மது மஹானந்த்(26) என்பவர் பிரதியுஷாவின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். பிரதியுஷா நடித்த தொலைக்காட்சி தொடரை தவறாமல் பார்த்து வந்துள்ளார்.

அவரால் பிரதியுஷாவின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் தனது 2 வயது மகன் முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த மதுவின் கணவர் நகுல் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

கதவை பல முறை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தான் மது தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பாலிகா வது நாடகத்தில் பிரதியுஷா நடித்த ஆனந்தி என்ற கதாபாத்திரத்துடன் தங்கள் மகள் ஒன்றிவிட்டதாக மதுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க