 October 8, 2018
October 8, 2018  manakkumsamayal.com
manakkumsamayal.com
                                தேவையான பொருட்கள்:
கோழி – அரை கிலோ.
எண்ணெய் – தேவையான அளவு.
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்.
இஞ்சி – 2 துண்டு.
பூண்டு – 7 பல்.
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.
கறிவேப்பிலை – சிறிதளவு.
பட்டை – 1.
லவங்கம் – சிறிதளவு.
கிராம்பு – 2.
இலை – 2.
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கம், கிராம்பு, இலை இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
அதன் பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதில் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி வைத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள பொடியையும் போட்டு குக்கரில் இரண்டு விசில் வரும்வரை மூடி வைக்கவும். பின்பு சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை கிளறவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு இறக்கவும்.