• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனா நிலக்கரி சுரங்க விபத்தில் 8 பேர் பலி

February 14, 2017 தண்டோரா குழு

சீனா நிலக்கரி சுரங்கத்தில் செவ்வாய்க் கிழமை (பிப்ரவரி 14) ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காணவில்லை.

சீனாவின் லூடி நகரின் அதிகாரிகள் கூறுகையில், “சீனாவின் மத்திய ஹுனான் மாகணத்தில் உள்ள லியன்யூஅன் நகரில் ஜுபாவ் நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். 3 பேரைக் காணவில்லை. இந்த நிலக்கரி சுரங்கம் லூடி நகர் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்படுகிறது” என்றார்.

சீனாவின் சின்ஹுவா செய்தித்தாள் வெளியீட்ட அறிக்கையில், “மொத்தம் 29 பேர் சுரங்கத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களில் 17 பேர் மேல் தளத்திற்கு பத்திரமாக வந்தனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார். மூன்று பேர் காணாமல் போய்விட்டனர்” என்று தெரிவித்தது.

ஹுனான் மாகாணத்தின் துணை ஆளுநர் தலைமையின் கீழ் விபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை நடந்தது. ஜுபாவ் நிலக்கரி சுரங்கம், லியன்யூஅன் நகரின் டௌளிஷன் பண்ணைக் குடியிருப்பு பகுதியில் உள்ள டெண்க்பெய் நிலக்கரி சுரங்கம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.

மேலும், உலகில் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பாளர் மற்றும் நுகர்வோர் நாடாக சீனா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க