“எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை அரசியல் சட்டத்துக்கே” என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை அவர் பேசியதாவது:
“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதால், நாங்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.
உண்மையில் எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை அரசியல் சட்டத்துக்கே எங்கள் ஆதரவு. இந்திய அரசியல் சாசன சட்டப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஒ. பன்னீர்செல்வம் அல்லது வி.கே. சசிகலா யாராவது ஒருவரை அழைத்து ஆட்சி அமைக்க அனுமதித்து, அவர்களைச் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆதரவுக் கடிதம் கொடுத்தவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரது பெரும்பான்மையில் சந்தேகம் இருந்தால், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் சொல்ல வேண்டும். காலதாமதம் செய்யக் கூடாது என்பதே எங்கள் கருத்து”
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்