• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெக்ஸிகோ நாட்டின் எல்லை சுவரைக் கட்ட ரூ. 1.45 லட்சம் கோடி

February 10, 2017 தண்டோரா குழு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டபடி அமெரிக்க மெக்ஸிகோ நாட்டின் எல்லையில் சுவர் கட்ட 1.45 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்ட அமெரிக்க மெக்ஸிகோ நாட்டின் எல்லையில் சுவரைக் கட்டி முடிக்க 1.45 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். மூன்று ஆண்டுகளாகும்” என்று தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயலர் ஜான் கெல்லியிடம் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2௦2௦ம் ஆண்டின் இறுதிக்குள் மெக்ஸிகோ நாட்டின் எல்லை மூட 125௦ மைல்கள் (2,௦௦௦ கிலோமீட்டர்) தூரம் கொண்ட மூன்று கட்டங்களை கொண்ட வேலிகள் மற்றும் சுவர்கள் எழுப்பும் செயல் திட்டம் அந்த அகல நிலை அறிக்கையில் அடங்கும்.

ஏற்கனவே 654 மையில் (1,௦46 கிலோமீட்டர்) அரணாக இருப்பதால், இந்த புதிய சுவர் கட்டடம் எல்லை முழுவதும் நீடிக்கும்” என்று தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க