• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இது தான் அரசியல்……….

April 9, 2016 வெங்கி சதீஷ்

கடந்த காலங்களில் அரசியல் என்பது நாகரீகமான ஒரு காலமாக இருந்தது. ஆனால் தற்போது அரசியல் என்றாலே யாரை யார் காலை வாரி விடுகிறார்கள், யார் மீது யார் குற்றம் சுமத்துகிறார்கள். இன்று யார் அமைச்சர், நாளை அவர் இருக்கிறாரா. தனக்குக் கீழ் உள்ளவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது உள்ளிட்ட பல மட்டமான வேலைகளைத்தான் காண முடிகிறது. இதிலும் தற்போது சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வந்ததால் அனைத்துத் தவறுகளும் உடனுக்குடன் வெளிவருகிறது. குறிப்பாக மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் தே.மு.தி.கவுடன் கூட்டணி என அறிவித்த உடன் திருமா விஜயகாந்தைப் பற்றித் தரக்குறைவாக பேசிய பழைய வீடியோவை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன. ஆனாலும் அவர் அதைப் பற்றி எனக்குத் தெரியாது எனக் கூறிவிட்டார். இதையடுத்து சமீபமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பைபாஸ் ராமசாமி என்பவரைப் பற்றி தரக்குறைவாகத் திட்டியது வாட்ஸ்ஆப்பில் பரவியது. ஆனால் செந்தில் பாலாஜிக்கு கட்சியில் சீட் கிடைத்தவுடன் பைபாஸ் ராமசாமி ஒரு சால்வையை போர்த்தி இருவரும் சேர்ந்து கொண்டார். இது தான் தற்போதைய அரசியல் நிலை………….

மேலும் படிக்க