ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டுக்காக உள்நாட்டு போரில் ஈடுபடும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் “எனது முதல்வர் பதவியைக் கட்டாயப்படுத்தித்தான் சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்தார்கள்” என்று கூறினார்.
மேலும், மக்கள் மற்றும் தொண்டர்கள் விரும்பும் ஒருவர் அதிமுக பொதுசெயலாளராகவும் முதல்வராகவும் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில்,
“நாம் பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து நாம் குற்றமறக் கடமையைச் செய்வோம். இது நம்மால் முடியுமா? தமிழ்நாட்டைத் தனிநாடாக உடைத்துவிட வேண்டாம்.
உறுதியாகச் சொல்கிறேன். ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டுக்காக உள்நாட்டுப் போரில் ஈடுபடும். யாரும் சாகமாட்டார்கள். ஆனால், மூடர்கள் மட்டும் உயிரோடு மீள்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்