• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடைக்கால பொது செயலாளரை நியமிக்க அதிமுக சட்ட விதியில் வழியில்லை – தேர்தல் ஆணையம்

February 8, 2017 தண்டோரா குழு

இடைக்கால பொதுச் செயலாளரை நியமிக்க அதிமுக சட்ட விதியில் வழியில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்டார்.

வி.கே. சசிகலா அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இடைக்காலப் பொதுச் செயலாளரை நியமிக்க அதிமுக சட்ட விதியில் வழியில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் கூறியதாவது:

இடைக்கால பொதுச் செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுகவின் சட்ட விதியில் இல்லை. அதிமுக-வின் நிரந்தர பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு, அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு தேவை என்றும் தற்காலிகப் பொதுச் செயலாளர் நியமிக்கப்பட அனுமதியில்லை என்றும் அக்கட்சி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச் செயலாளராக ஒருவரை நியமிக்க முடியும். ஆண்டுகள் அ.தி.மு.க. கட்சியில் தொடர்ந்து ஐந்து உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச் செயலாளராகப் பதவியேற்க முடியும் என்ற விதியை நீக்கிய பிறகுதான் இடைக்கால பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றார்.

இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க