• Download mobile app
11 Nov 2026, WednesdayEdition - 3927
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ்அப் மூலம் சேமிப்பு கணக்கு துவங்கும் புதிய வசதி: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்

November 11, 2026 தண்டோரா குழு

இந்திய வங்கித்துறையில் முதல்முறையாக, உஜ்ஜீவன் வங்கி வாட்ஸ்அப் மூலமாக சேமிப்பு கணக்கை தொடங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வாடிக்கையாளர்கள் இதற்காக எந்த ஒரு புதிய வங்கி செயலியையும் டவுன்லோட் செய்ய தேவையில்லை. வாடிக்கையாளர்கள் 900 208 2121 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ‘Open Savings Account’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். மொபைல் எண் மற்றும் பான் கார்டு சரிபார்க்கப்பட்ட பிறகு, CKYC அல்லது ஆதார் சரிபார்ப்பு நடைபெறும்.

இதன் மூலம் உங்கள் விவரங்கள் தானாகவே பூர்த்தி செய்யப்படும். உங்களுக்கு தேவையான சேமிப்பு கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான பணத்தை செலுத்தி, வீடியோ கேஒய்சி செய்து முடிக்க வேண்டும். சரிபார்ப்பு முடிந்ததும் உடனடியாக கணக்கை பயன்படுத்தத் தொடங்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் பாதுகாப்பான வாட்ஸ்அப் மூலமாகவே வங்கி சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். மக்கள் புதிய செயலிகளை எப்படி பயன்படுத்துவது என்று சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. தற்போது வங்கியின் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் பேங்கிங்கை பயன்படுத்துகின்றனர்.

கணக்கில் உள்ள தொகை, சமீபத்திய பரிவர்த்தனைகள், பேங்க் ஸ்டேட்மென்ட், லோன் விவரங்கள், ஏடிஎம் இருப்பிடம் போன்ற 50-க்கும் மேற்பட்ட சேவைகளை இதில் பெறலாம்.வங்கியின் 22 சதவீத வாடிக்கையாளர் சேவை கோரிக்கைகள் தற்போது வாட்ஸ்அப் மூலமாகவே கையாளப்படுகின்றன.

இது குறித்து உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி கரோல் புர்டாடோ கூறுகையில்,

“வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாக வழங்குவதே உண்மையான முன்னேற்றமாகும். மக்கள் தினமும் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மூலமாகவே வங்கி கணக்கை தொடங்குவது, அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவத்தை தரும். வங்கி சேவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்க இதை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம்,” என்றார்.எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடனான பதில்கள், பல மொழிகளில் பயன்படுத்தும் வசதி மற்றும் குரல் மூலமாக இயங்கும் வசதி போன்றவற்றையும் வாட்ஸ்அப் பேங்கிங்கில் கொண்டு வர உஜ்ஜீவன் வங்கி திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க