• Download mobile app
14 Oct 2026, WednesdayEdition - 3899
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் HomeLane-ன் நான்காவது அனுபவ மையம் திறப்பு!

October 14, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வீட்டு உள் அலங்கார வடிவமைப்பு நிறுவனமான HomeLane, கோவை கலப்பட்டிச் சாலையில் தனது புதிய அனுபவ மையத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் கோவையில் அந்நிறுவனத்தின் அனுபவ மையங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையம், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் முக்கிய குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த மையம், 1,350 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மாடுலர் சமையலறைகள், அலமாரிகள் மற்றும் முழுமையான வீட்டு உள் அலங்கார வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்வையிடலாம்.

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீட்டு உட்புற வடிவமைப்புகளை முப்பரிமாண (3D) காட்சிகளாகப் பார்வையிடவும், வடிவமைப்புக்கான செலவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வடிவமைப்பு முதல் செயலாக்கம் வரை ஒருங்கிணைந்த சேவைகளும் வழங்கப்படுகின்றன.

HomeLane நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (வணிகம் மற்றும் FOFO) வெங்கடேஷ் G.தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில்,நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் வணிகக் கூட்டாளர்கள் பங்கேற்றனர். HomeLane இணை நிறுவனரும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியுமான தனுஜ் சவுத்ரி பேசுகையில், கோவை வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு நகரமாகத் திகழ்வதாகவும், வீட்டு உரிமையாளர்களுக்கு தரமான வடிவமைப்பு, வெளிப்படையான விலை நிர்ணயம் மற்றும் திட்டமிட்ட காலக்கெடுவில் சேவைகளை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

HomeLane பார்ட்னர் விக்னேஷ்வர் P.A. கூறுகையில்,

கலப்பட்டிச் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு தொழில்முறை வடிவமைப்பு ஆலோசனைகள் மற்றும் நம்பகமான செயலாக்கச் சேவைகளை வழங்க இந்த மையம் உதவும் என்றார்.

இந்த அனுபவ மையம், HomeLane நிறுவனத்தின் AI தொழில்நுட்பத் தளமான SpaceCraft மூலம் செயல்படுகிறது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளின் உட்புற வடிவமைப்புகளை 3D-இல் காட்சிப்படுத்துவதுடன், உடனடி விலை மதிப்பீட்டையும் பெறலாம்.

மேலும், 45 நாட்களில் சேவை வழங்குவதற்கான உத்தரவாதம், 10 ஆண்டுகள் பொருள் உத்தரவாதம், திட்ட மேலாண்மை ஆதரவு உள்ளிட்ட வசதிகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 100 FOFO (Franchise Owned, Franchise Operated) அனுபவ மையங்களை எட்டும் இலக்குடன் தனது சேவைகளை விரிவுபடுத்தி வருவதாக HomeLane தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க