August 24, 2026
தண்டோரா குழு
பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளை கடந்த 59 ஆண்டுகளாக பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சிறப்பாக நடத்தி வருகிறது. இவ்வாண்டு 60-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோவை பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபால கிருஷ்ணன் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ஆர். ருத்ரமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:-
கோவை மாவட்டதில் கூடைப்பந்து போட்டிகள் மிகவும் பிரபலமானது.நமது மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக பயிற்சி பெற்று மாநில அளவிலும்,தேசிய அளவிலும் சிறப்பான இடத்தை பெற்றுள்ளார்கள், இதன் மூலம் அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.இதை ஊக்குவிக்கும் வகையில் தான் பிஎஸ்ஜி நிறுவனம் மூன்று வகையான போட்டிகளை கடந்த 59 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. கடந்த 49 ஆண்டுகளாக மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகளும், கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாவட்டம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து வீரர்கள் பங்கு பெரும் வகையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அகில இந்திய போட்டிக்கு தகுதி பெறும். 60-ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த அகில இந்திய போட்டிகளில் இந்தியா அளவில் புகழ்பெற்ற சிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடுகின்றன.ஆண்கள் பிரிவில் 1) இந்தியன் வங்கி – தமிழ்நாடு, 2) இந்திய விமானப்படை – டெல்லி 3) இந்திய கப்பல்படை – லோனாவாலா 4) ஓஎன்ஜிசி – டெல்லி 5) கேரள மாநில மின்வாரியம் அணி, மாநில போட்டியில் வெற்றி பெற்ற 6) ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் – சென்னை மற்றும் 7) தமிழ்நாடு இதர அணி (சுநளவ ழக வுயஅடை யேனர) ஆகிய 7 அணிகளும், பெண்கள் பிரிவில் 1) தென் மத்திய ரயில்வே – செக்கந்தராபாத், 2) தென் மேற்கு ரயில்வே – ஹ_ப்ளி மற்றும் 3) கேரள மின் வாரியம் – திருவனந்தபுரம் அணிகளோடு 4) கோவை மாவட்ட மகளிர் அணியும் பங்கு பெறுகின்றன.
இப்போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூபாய் 1,00,000/- மற்றும் சுழல் கோப்பையும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 75,000/- மற்றும் கோப்பையும், மூன்றாம் இடத்தை பெறும் அணிக்கு ரூபாய் 40,000/-, நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 30,000/- மற்றும் சிறந்த விளையாட்டு வீரருக்கு ரூபாய் 10,000/- வழங்கபடும்.
பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசு ரூபாய் 75,000/- மற்றும் சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசு ரூபாய் 50,000/- மற்றும் கோப்பையும், மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு தலா ரூபாய் 25,000/- மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு சுள.10,000/- என மொத்தம் ரூபாய் 4,35,000/- பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.
இவ்விழாவில் பிஎஸ்ஜி கல்லூரிகளில் படித்து கூடைப்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற முன்னாள் வீரர்கள் மற்றும் பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் படிக்கும் இந்திய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு செய்து பணமுடிப்புகள் வழங்கப்பட உள்ளது. மொத்த பரிசு தொகையாக ரூபாய் 6 இலட்சம் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
26-ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு நடைபெறும் துவக்க விழா நிகழ்ச்சிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் ஆர்.ஆர்.காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவங்கி வைக்கிறார்.
30-ஆம் தேதி நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவிற்கு பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபால கிருஷ்ணன் தலைமையில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரும், தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு அரசு பொதுப்பணி துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சருமான ஆதாவ் அர்ஜுனா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும்,சக்தி நிறுவனங்களின் தலைவர் முனைவர் எம். மாணிக்கம் அவர்களும்,சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவருமான ஜி.செல்வராஜ் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள உள்ளார்கள். இவ்வாறு கூறினார்கள். பேட்டியின் போது உடன் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் டி.பழனிசாமி இருந்தார்.
இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபால கிருஷ்ணன் அவர்களும் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் முனைவர் ஆர்.ருத்ரமூர்த்தி அவர்களும் செய்து வருகிறார்கள்.
இவ்விளையாடு போட்டிகள் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள சர்வதேச உள்விளையாடு அரங்கில் வரும் ஆகஸ்ட் 26 முதல் 30ஆம் தேதி வரை மாலையில் மட்டும் நடைபெறும்.