July 7, 2026
தண்டோரா குழு
கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் லுலு ஹைப்பர்மார்க்கெட்டில், வாடிக்கையாளர்களுக்காக ‘எண்ட் ஆஃப் சீசன்’ (End of Season) பிளாட் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கும் மெகா விற்பனை ஜூலை 9 முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடைபெறும் இந்த நான்கு நாள் சிறப்பு விற்பனையில், மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், எலெக்ட்ரானிக்ஸ், மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடைகளும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிக சேமிப்புடன் தரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பை இந்த மெகா விற்பனை வழங்குவதாக லுலு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பிளாட் 50% மெகா விற்பனையின் அறிமுக நிகழ்ச்சியில், லுலு மண்டல மேலாளர் மகேசன், பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன், சூப்பர்மார்க்கெட் மேலாளர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.