• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் அதிநவீன ஏர் கம்ப்ரசர்கள் இன்டெக் 2026 கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது

June 5, 2026 தண்டோரா போட்டு

உலகின் முன்னணி காற்றழுத்தக் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும், ஆறு தசாப்தங்களுக்கும் மேலான air-compressor துறையின் அனுபவத்தைக் கொண்டதாகவும் இருக்கும் எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம், கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் 21வது இன்டெக் – சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியில் தனது சமீபத்திய compressed air technologies and solutions-ஐ காட்சிப்படுத்தியுள்ளது.

ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 70,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தக் கண்காட்சிக்கு பிளாட்டினம் ஸ்பான்சராக இருக்கும் எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம், தொழில்துறை பயன்பாடுகளில் அதிக செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் சேமிப்பை வழங்கும் விரிவான கம்ப்ரெஸ்ட்டு ஏர் அமைப்புகள் மற்றும் துணை உபகரணங்களை ஹால் பி, ஸ்டால் 2-ல் காட்சிப்படுத்தியுள்ளது.

எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறியதாவது,

இன்டெக் 2026 கண்காட்சியில் எங்கள் நிறுவனம் காட்சிப்படுத்தும் தயாரிப்புகள், வாடிக்கையாளர்கள் தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்துவதோடு ஆற்றல் பயன்பாடு மற்றும் மொத்த இயக்கச் செலவையும் குறைக்க உதவும் கம்ப்ரெஸ்ட்டு ஏர் தீர்வுகளை உருவாக்குவதில் எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.

தொழில்துறைகள் அதிக ஆற்றல் திறன், தொழில்துறையில் முன்னணி நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் சாதன செயல்திறனைத் தாண்டி, அளவிடக்கூடிய வணிகப் பலன்களை வழங்கும் தீர்வுகளை நோக்கி மாறியுள்ளன. Demand=Match தொழில்நுட்பம், மேம்பட்ட ஆற்றல் திறன் மிக்க கம்ப்ரசர் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு கொண்ட கம்ப்ரெஸ்ட்டு ஏர் தீர்வுகள் போன்ற புதுமைகளின் மூலம், போட்டித்திறன் மிக்க, நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான உற்பத்தி செயல்பாடுகளை உருவாக்க வாடிக்கையாளர்களுக்கு உதவுவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.

எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அன்வர் ஜெய் வரதராஜ் கூறியதாவது,

கம்ப்ரெஸ்ட்டு ஏர் அமைப்புகள் மேலும் அறிவார்ந்ததாகவும்,இணைக்கப்பட்டதாகவும், ஆற்றல் திறன் மிக்கதாகவும் மாறி வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை உயர்த்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. மேம்பட்ட கம்ப்ரசர் கட்டுப்பாடுகள், IoT அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் அடுத்த தலைமுறை ஆற்றல் திறன் மிக்க தயாரிப்புகள் வரை, வாடிக்கையாளர்களுக்கு அளவிடக்கூடிய மதிப்பை வழங்கும் புதுமைகளில் எங்கள் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது, என்றார்.

எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய செயல் தலைவர் பவேஷ் காரியா கூறியதாவது,

இன்டெக் 2026-ல் எல்ஜி காட்சிப்படுத்தும் கம்ப்ரெஸ்ட்டு ஏர் தீர்வுகள், வாடிக்கையாளர்களின் ஆற்றல் திறன், செயல்பாட்டு நம்பகத்தன்மை மற்றும் கம்ப்ரெஸ்ட்டு ஏர் அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான எங்களின் தொடர்ச்சியான முயற்சியை எடுத்துக்காட்டுகின்றன. காப்புரிமை பெற்ற Demand=Match தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பங்கள், தொழில்துறைகள் ஆற்றல் பயன்பாட்டை எவ்வாறு உகந்த முறையில் நிர்வகிக்க முடியும், மாறுபடும் தேவை நிலைகளுக்கு எவ்வாறு திறம்பட பதிலளிக்க முடியும் மற்றும் கணிசமான உற்பத்தி மற்றும் செலவுச் சிக்கன பலன்களை எவ்வாறு பெற முடியும் என்பதைக் காட்டுகின்றன, என்றார்.

மேலும் படிக்க