• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஞ்சலையம்மாள் பிறந்தநாள்: அவரது திருவுருவப் படத்திற்கு தவெக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் மலரஞ்சலி!

June 1, 2026 தண்டோரா குழு

விடுதலைப் போராட்ட வரலாற்றில் “நம்மால் எதையும் சாதிக்க முடியும்” என்ற அசாத்திய துணிச்சலையும், தணியாத நாட்டுப்பற்றையும் விதைத்த வீர மங்கை அஞ்சலையம்மாள் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முக்கிய கொள்கைத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் சிறப்பான முறையில் மரியாதை செலுத்தப்பட்டது.நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த இந்தத் தீரமிக்க தலைவரின் நினைவைப் போற்றும் வகையில் கட்சியினர் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் அஞ்சலையம்மாள் அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அஞ்சலையம்மாளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி,நெகிழ்ச்சியோடு தனது மரியாதையைச் செலுத்தினார்.

இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க