• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு பிரத்யேக குடல் அழற்சி நோய்களான கிளினிக் துவக்கம்

June 1, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வி.ஜி.எம் மருத்துவமனை, உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோய்களான (Inflammatory Bowel Disease – IBD) க்ரோன்ஸ் நோய் (Crohn’s Disease) மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் (Ulcerative Colitis) நோயாளிகளுக்கான பிரத்யேக VGM IBD கிளினிக்கை தொடங்கியது. இக்கிளினிக்கை மூத்த குடலியல் நிபுணரும் பத்ம பூஷண் விருதுபெற்றவருமான டாக்டர் கே.ஆர். பழனிசாமி திறந்து வைத்தார்.

க்ரோன்ஸ் நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் உள்ளிட்ட IBD நோய்கள் இந்தியாவில் இளம் வயதினரிடமும், வளரிளம் பருவத்தினரிடமும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் காணப்படுதல், வயிற்றுவலி, காரணமற்ற உடல் எடை இழப்பு, ரத்தசோகை மற்றும் அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கில் மேம்பட்ட எண்டோஸ்கோபி பரிசோதனைகள், பயாலஜிக் சிகிச்சைகள், ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் சிக்கலான IBD நோயாளிகளுக்கான குறைந்த காயப்படுத்தும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சை வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, IBD நோயாளிகள் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கு நோயை புரிந்துகொண்டு திறம்பட நிர்வகிக்க உதவும் வகையில் “My Gut, My Voice” என்ற மாதாந்திர நோயாளர் ஆதரவு மற்றும் விழிப்புணர்வு மன்றத்தையும் வி.ஜி.எம் மருத்துவமனை அறிமுகப்படுத்தியது.

இந்நிகழ்வில் பேசிய வி.ஜி.எம் மருத்துவமனையின் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத்,

“VGM IBD கிளினிக் மூலம் ஆதாரப்பூர்வமான, நோயாளி மையப்படுத்தப்பட்ட சிகிச்சை வழங்கப்படுவதுடன், IBD நோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வும் மேம்படுத்தப்படும்” என்றார்.

அறிவியல் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு டாக்டர் வம்சி மூர்த்தி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து, டாக்டர் மதுரா பிரசாத் சுமன் IBD மற்றும் குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) குறித்து, டாக்டர் எஸ். திவ்யசாரதி ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்து, IBD ஆலோசகரான திரு. சுமந்த்ரன் நோயாளிகளுக்கான உளவியல் ஆதரவு குறித்து சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியை டாக்டர் மித்ரா பிரசாத் ஒருங்கிணைத்தார். நன்றியுரையை டாக்டர் சி.பி.எஸ். சுமன் வழங்கினார்.

மேலும் படிக்க