• Download mobile app
13 Jul 2026, MondayEdition - 3806
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையின் பெருமை’ ஸ்ரீ அன்னபூர்ணாவின் 23-வது கிளை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் துவக்கம்

May 28, 2026 தண்டோரா குழு

கோவையின் பெருமை என்று அழைக்கப்படும் உணவக நிறுவனமான ஸ்ரீ அன்னபூர்ணா, தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வியாழக்கிழமை (28.05.26) அன்று திறந்தது. மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ். சதீஷ்குமார் அவர்கள் புதிய கிளையைத் திறந்துவைத்தார்.

முதல் தளத்தை கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க நிர்வாகிகள் அன்னலட்சுமி உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ராமசாமி மற்றும் ஹரிபவனம் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். பாலச்சந்தர் இணைந்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன்,இணை நிர்வாக இயக்குநர் ஆர். வெங்கடேஷ், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் எஸ். தாமோதரசுவாமி, மற்றும் எக்சிகியூடிவ் இயக்குநர் விவேக் சீனிவாசன், கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கிளையில், பிரத்யேக டைனிங் ஹால், இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவு மற்றும் விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
தரை தளத்தில் அமைந்துள்ள டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்த முடியும்.

இந்த கிளையின் முதல் விற்பனையை திரு. எஸ்.கே.எம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ சிவகுமார் தொடங்கிவைக்க, அதைனை அவென்யூ குழுமத்தின் தலைவர் எம்.எஸ்.குமரன் பெற்றுக்கொண்டார்.

பிரத்யேகமாக இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 25-க்கும் அதிகமான கார வகைப் பலகாரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரி உணவு வகைகளை வாங்கி மகிழலாம். இந்த வளாகத்தில் 100 கார்களை நிறுத்தும் வசதியுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க