• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம்

February 4, 2017 தண்டோரா குழு

புது தில்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தன் வீட்டில் சனிக்கிழமை (பிப்ரவரி 4) தன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து புதுதில்லி காவல்துறை அதிகாரி கூறியதாவது:

தென் மேற்கு புதுதில்லியில் உள்ள துவாரகா பகுதியில் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தவ ர் ஷிவ் சாகர். அருகில் ஒரு பள்ளியில் படித்து வந்தார்.

அவருக்கும் அவரது தாயாருக்கும் மாவு பிசைவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அறைக்குள் சென்று தாளிட்டு கொண்ட ஷிவ்சாகர் தூக்கிட்டு இறந்ததாகத் தெரியவந்துள்ளது.

பள்ளியில் தேர்வு காரணமாக மன அழுத்தத்தில் அவர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். அதனால், இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த அறையில் தற்கொலை கடிதம் எதுவும் இல்லை. ஷிவ் சாகரின் சகோதரியும் வீட்டில் இருந்தார்.
பிறகு வெளியே சென்றுள்ளார். ஷிவ் சாகர் வீட்டில் தனியே இருந்திருக்கிறார்.

பணிகளை முடித்துவிட்டு அவருடைய தாயார் வீடு திரும்பிய போது, கதவு உள்ளே தாழிட்டிருந்தது. பல முறை கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், அருகில் வசிப்போரின் உதவியுடன் கதவை உடைத்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது ஷிவ் சாகர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க