• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ரீல் சே ரியல் ஸ்டார்’-ஐ அறிமுகப்படுத்த பிர்லா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, ‘வோடஃபோன் ஐடியா லிமிடெட்’ செயல்படுகிறது!

April 17, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் பொழுதுபோக்குத் துறைக்குள் நுழைவதற்கான வாய்ப்பை அனைவருக்கும் சமமாக வழங்கும் நோக்கில், ‘வோடஃபோன் ஐடியா லிமிடெட்’ உடன் இணைந்து ‘ரீல் சே ரியல் ஸ்டார்’ என்ற மாபெரும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக மொபைல் ஃபோன் முலம் நடிப்பில் அபாரமான திறமையைக் கொண்டிருக்கும் இளம் திறமைசாலிகளைக் கண்டறியும் தேடல் தளமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய திறமைகளை அடையாளங்கண்டு அவர்களை அறிமுகப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள ‘ரீல் சே ரியல் ஸ்டார்’, நடிப்புத் திறமையுள்ளவர்கள் வசிக்கும் இடம், தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்காமலிருக்கும் சூழல் மற்றும் திரையுலகப் பின்புலம் போன்ற பாரம்பரிய தடைகளைத் தகர்த்து, கையில் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சினிமாவின் கதவுகளைத் திறக்கிறது.

திறமை எங்கிருந்து வேண்டுமானாலும் வெளிப்படலாம், அனைவருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை கிடைக்க வேண்டும் என்ற எளிமையான, ஆனால் மிகவும் வலிமையான சிந்தனையின் அடிப்படையில் இந்த ‘ரீல் சே ரியல் ஸ்டார்’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது. வோடஃபோன் ஐடியாவின் டிஜிட்டல் ரீச் மற்றும் பிர்லா ஸ்டுடியோஸின் படைப்புத்திறனை, கலாச்சார நோக்கத்தை ஒருங்கிணைப்பது.

இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் இதுவரை அடையாளங்காணப்படாத மற்றும் தகுதியான திறமையாளர்களை பிரதான பொழுதுபோக்குத் துறையுடன் இணைப்பதை இத்தளம் உறுதி செய்கிறது. இதன்மூலம் இந்தியாவின் மிக உண்மையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நடிப்புத் திறமைகளை உருவாக்குவதே இந்தத் தளத்தின் நோக்கமாகும்.

வோடஃபோன் ஐடியாவின் தலைமை செயல் அதிகாரி அபிஜித் கிஷோர் கூறுகையில்,

“ஒருவருடன் ஒருவர் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சமூகத்தையும் இணைக்கும் வசதியானது ஒரு வாய்ப்பை உருவாக்கும் போதுதான் அது மிகவும் அர்த்தமுள்ளதாக மாறுகிறது. நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள நடிகர்கள், நடிகைகளின் கைகளுக்கே ஆடிஷன் அறையை நேரடியாகக் கொண்டு வருவதன் மூலம், இதுவரையில் திரையுலகில் நுழைவதற்கு இதுவரையில் நிலவிவரும் பாரம்பரியத் திரையுலகத் தடைகளை ‘ரீல் சே ரியல் ஸ்டார்’ உடைக்கிறது.

எங்களின் வலுவான நெட்வொர்க் ,20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட விரிவான டிஜிட்டல் ரீச் மற்றும் பிர்லா ஸ்டுடியோஸின் படைப்புத் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் திறமைக்கான தேடலை அனைவருக்கும் சென்றடைய செய்கிறோம். எங்களது இலக்கு மிகவும் எளிமையானது: திறமையானவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், அது பரபரப்பான பெருநகரமாக இருந்தாலும் சரி, அல்லது ஒதுக்குப்புறமான தொலைத்தூர கிராமமாக இருந்தாலும் சரி, அவர்களின் திறமை இருப்பிடத்தால் முடக்கப்படாமல் அடையாளங்காணப்படுவதை உறுதி செய்வதே ஆகும்.நாங்கள் வெறும் ஒரு தளத்தை மட்டும் உருவாக்கவில்லை; லட்சக்கணக்கான மக்களின் கனவுகளை நனவாக்க ஒரு உண்மையான வாய்ப்பை வழங்குகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த தேசிய அளவிலான முன்னெடுப்பு, இந்தியா முழுவதும் உள்ள ஆர்வமுள்ள நடிகர்கள், நடிகைகள் தங்களின் திறமையை முழுவதும் டிஜிட்டல், ஆப் மற்றும் இணையம் வழியிலான இந்த பயணத்தின் மூலம் வெளிப்படுத்த உதவுகிறது. திரைப்பட வாய்ப்புகளைப் பெறுவதற்கும் திறமையை வெளிப்படுத்துவதற்கும் திரையுலகைச் சேர்ந்தவர்களின் பரிந்துரைகள் தேவை என்ற தடையை நீக்கி, பங்கேற்பாளர்கள் தங்களது ஆடிஷன் வீடியோக்களை நேரடியாகவே அப்லோட் செய்யலாம்.

மேலும் படிக்க