• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே மாதத்திற்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் கூடுதல் நகரங்களுக்கு 5ஜி சேவையை விரிவாக்கம் செய்ய ‘வி’ நிறுவனம் திட்டம்

April 10, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘வி’, சென்னையில் தனது 5ஜி சேவைகளைத் தொடங்கியுள்ளது.

‘வி’ 5 ஜி சேவையின் இந்த விரிவாக்கம் குறித்து ‘வி’ நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல வணிகத் தலைவர் சாய் வெங்கட்ராமன் கூறுகையில்,

இந்தியா முழுவதும் உள்ள ‘வி’ வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைய இணைப்பை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.இந்த அறிமுகத்தின் மூலம், இந்தியாவின் டாப் டேட்டா சந்தைகளில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், ஏற்கனவே உள்ள 50 நகரங்களுடன் சேர்த்து, மும்பை, டெல்லி- என்சிஆர், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய ஐந்து மெட்ரோ நகரங்களிலும் இப்போது ‘வி’ 5ஜி சேவை கிடைக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில்,இந்தியா முழுவதும் மேலும் 90 நகரங்களை இணைக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்திருந்தது.இந்த விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மே மாதம் 2026-க்குள் கோயம்புத்தூர், திருச்சி, சேலம்,திருப்பூர்,வேலூர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் ‘வி’ தனது 5 ஜி சேவைகளை விரிவாக்கம் செய்யவுள்ளது.‘வி’ 5ஜி சேவையின் இந்த விரிவாக்கமானது, 17 முன்னுரிமை வட்டாரங்களில் உள்ள 133 நகரங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்தும் ‘வி’-ன் ஒட்டுமொத்த 5 ஜி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள தொழில் மையங்கள், அதிக டேட்டா பயன்பாடு கொண்ட இடங்கள் மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புறங்களுக்கு ‘வி’ அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முக்கிய தொழில் நகரங்களான கோவை, சேலம், திருப்பூர்; மருத்துவம் மற்றும் கல்வியில் முக்கியத்துவம் பெற்ற மையமான வேலூர்; கல்வி மற்றும் வணிக மையமான திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் ‘கிழக்கின் பிரெஞ்சு ரிவியரா’ என்று அழைக்கப்படும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் விரிவுப்படுத்தப்பட்டிருக்கும் ‘வி’ 5ஜி சேவையானது, ‘வி’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களூக்கும், மருத்துவம், கல்வி, தொழில்துறை ஆகியவற்றின் முன்னேற்றங்களுக்கு காட்டிவரும் அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது.

சிறந்த 5 ஜி அனுபவத்தை வழங்குவதற்காக,‘வி’ நிறுவனம் நோக்கியாவுடன் இணைந்து நவீன மற்றும் மின்-ஆற்றல் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை நிறுவியுள்ளது.மேலும், நெட்வொர்க் செயல்பாட்டைத் தானாகவே மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் வலைப்பிணையங்கள் தொழில்நுட்பத்தையும் செயல்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் படிக்க